கொரோனாவா குருமாவான்னு அசால்ட்டா இருந்தேன்: சென்றாயன் வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவா குருமாவான்னு ரொம்ப அசால்ட்டாக இருந்தேன், இப்பொழுது எனக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது என நடிகர் சென்றாயன் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவி வரும் சென்றாயன் வைரஸ் திரையுலகினர்களையும் விட்டுவைக்கவில்லை. பல திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம் இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான சென்றாயனுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
வாழ்க்கையில் எல்லாமே பாசிட்டிவாக தான் நான் பார்ப்பேன். சினிமாவில் ஜெயிக்க வேண்டும், உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பேன். இப்பொழுது எனக்கே கொரோனா பாசிட்டிவ் ஆக மாறிவிட்டது. ஆரம்பத்தில் கொரோனாவா குருமாவான்னு என அசால்ட்டாக இருந்தேன், இப்பொழுது எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள்
நான் தற்போது என்னுடைய வீட்டில் தனியாக இருக்கிறேன், என்னுடைய மனைவி மற்றும் குழந்தை பக்கத்து அறையில் பாதுகாப்பாக உள்ளார்கள். அவ்வப்போது மனைவி எனக்கு வந்து சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் நினைப்பது மாதிரி கிடையாது, கொரோனா மிகவும் பயங்கரமானது, எனவே மக்களே கொரோனாவை நாம் ஒழிக்க வேண்டுமென்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
நடிகர் சென்றாயன் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரில்லா, ஆஜித் ஆகியோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com