விவாகரத்து செய்யும் முன் யோசியுங்கள், அது மரணத்தை விட கொடுமையானது: பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலித்து கைப்பிடித்த மனைவியை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என பிரபல நடிகர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக திரை உலகின் நட்சத்திர பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமீர்கான், சமந்தா, இமான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சமீபகாலமாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பதும் அந்த வரிசையில் நடிகர் தனுஷும் நேற்று தனது அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொலைக்காட்சியில் ’மகாபாரதம்’ தொடரில் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் நடித்த பிரபல நடிகர் நிதிஷ் பரத்வாஜ், சமீபத்தில் அளித்த பேட்டியின் போது விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என்றும் அது மிகவும் வலி தரக்கூடியது என்றும் கூறியுள்ளார்.
நடிகர் நிதிஷ் பரத்வாஜ் கடந்த 1991ம் ஆண்டு மோனிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு 2005ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு ஸ்மித் கேட் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்தில் தனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை என்றும் ஆனால் வேறு வழியில்லாமல் விவாகரத்து செய்ய நேரிட்டது என்றும் தவறான முடிவு காரணமாகவே தம்பதியினர் விவாகரத்து முடிவை எடுக்க நேரிடுகிறது அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com