'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்

  • IndiaGlitz, [Sunday,May 24 2020]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு முடிவடைந்ததும் இந்த படத்தின் அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும், இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ திரைப்படம் தமிழைப்போலவே தெலுங்கிலும் வெளியாக உள்ளது என்பதும் தெலுங்கில் ’ஆகாஷம் நீ ஹாடு ரா’ என்ற டைட்டிலில் உருவாகி உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் உருவாகும்போது அவற்றில் சூர்யாவே பின்னணி குரல் கொடுப்பார் என்பது வழக்கமான ஒன்று. ஆனால் சூரரைப்போற்று தெலுங்கு பதிப்பில் சூர்யாவுக்கு இளம் நடிகர் ஒருவர் குரல் கொடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான சத்யதேவ் தான் சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளதாகவும், இதனையடுத்து இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுதாகொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

More News

ஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்

 சூர்யா நடித்த 'மாஸ் என்ற மாசிலாமணி' கார்த்தி நடித்த 'சகுனி' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ்.

நடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய மாநில அரசுகள் மீது பாரபட்சமின்றி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் சமீபத்தில் இயக்கிய 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் பெரும்பாலானோரால் வரவேற்பை பெற்று இணையதளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது

4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை