நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நல்லவரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதல் அதனையடுத்து இந்திய விமானப்படையின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவைகளை அடுத்து இந்தியாவில் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்க முயற்சித்தன. அந்த விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அவ்வாறு விரட்டியடிகும்போதுதான் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அபிநந்தன் பாராசூட் மூலம் பாகிஸ்தானில் குதிக்க, அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது
பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தனை முதலில் விடுதலை செய்ய பாகிஸ்தான் விரும்பவில்லை. ஆனால் இந்தியா மூலம் உலக நாடுகள் கொடுத்த அழுத்தம், அபிநந்தனை விடுவிக்காவிட்டால் போரை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேறு வழியில்லாமல் அபிந்தனை விடுவிக்க பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக்கொண்டார்.
ஆனால் அபிநந்தனை விடுவித்த இம்ரான்கான் பெரிய தியாகி போல் போற்றப்படுகிறார் இந்த போற்றுதலை பாகிஸ்தான் மக்கள் கூறினால் கூட பரவாயில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள ஒருசிலர் இம்ரான்கானுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி, இம்ரான்கானிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சதீஷ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நம் நாட்டை தாக்க வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்துச் செல்லும் போது தான் அபிநந்தன் அங்கே விழுந்திருக்கிறார். அவரை விடுவித்த பாகிஸ்தானை பாராட்டும் தாங்கள் நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள்?!? என்று டுவீட் செய்துள்ளார். மேலும் ஒரு டுவீட்டில் 'அபிநந்தன் நீங்கள் இந்தியாவின் பெருமை... நமது ராணுவத்தின் பெருமை.... உங்கள் வீரத்தையும் நாட்டுப்பற்றையும் பார்த்து நமது நாட்டை தரக்குறைவாக பேசுபவர்கள் திருந்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
நம் நாட்டை தாக்க வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்துச் செல்லும் போது தான் அபிநந்தன் அங்கே விழுந்திருக்கிறார். அவரை விடுவித்த பாகிஸ்தானை பாராட்டும் தாங்கள் நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள்?!? https://t.co/QBngZMAHSg
— Sathish (@actorsathish) March 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout