எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா? ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆவேசமான பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மேலும் கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரிலும், ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் 'எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா? என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தனது ஆவேசமான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
“லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா?” என சதீஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Engal Naadu Enna Kuppai Thottiya? #BanSterlite pic.twitter.com/Kd0ssFbbcW
— Sathish (@actorsathish) April 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments