10 பேர் கூட போதும் தோனி, ஜாதவ்வை தூக்குங்க: தமிழ் நடிகர் கிண்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி கொடுத்த 168 என்ற எளிய இலக்கை நோக்கி விரட்டிய சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் வாட்சன் அபார அரைசதம் அடித்ததும் சென்னை அணி இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெறும் என்றே கருதப்பட்டது. ஆனால் வாட்சன், அம்பத்தி ராயுடு, தோனி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகியதை அடுத்து சென்னை அணி கொஞ்சம் திணறியது.
இருப்பினும் 21 பந்துகளில் 39 ரன்கள் தான் தேவை என்ற நிலையில் டி20 போட்டியில் இந்த ரன்களை அடிப்பது மிக எளிது என்றே கருதப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய கேதார் ஜாதவ் 12 பந்துகளில் வெறும் 7 ரன்கள் என ஆமை வேகத்தில் அடித்து சென்னை அணியின் தோல்வியை உறுதி செய்தார்.
இந்த நிலையில் கேதார் ஜாதவ்வுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. நெட்டிசன்கள் அவரது பேட்டிங்கை கேலி செய்து டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சதீஷ், கேதார் ஜாதவ் குறித்து கூறிய போது ’தயவுசெய்து அணிக்கு 10 பேர் கூடபோதும் தோனி’ என்று கூறியதுடன், இன்னொரு பதிவில் ’ரொம்ப நன்றி ஜாதவ், நல்லா வருவீங்க’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.
நடிகர் சதீஷ் இந்த இரண்டு டுவிட்டுகளுக்கும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Pls Dhoni.... 10 per kooda podhum
— Sathish (@actorsathish) October 7, 2020
Thank u so much Jadhav. Nalla varuvinga
— Sathish (@actorsathish) October 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com