என்னுடைய மிகச்சிறந்த பயணம்: தளபதி விஜய்யுடன் பயணம் செய்யும் நடிகரின் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,December 21 2021]

தளபதி விஜய் உடன் பயணம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து எனது மிகச் சிறந்த பயணம் என நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்த ’பைரவா’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் நடிகர் சதீஷ் காரில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள சதீஷ், ‘ இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, ‘எனது மிகச்சிறந்த பயணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் காரில் பயணம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து ’என்னுடைய பயணம் அவ்வளவு மோசமானது அல்ல’ என்ற புகைப்படத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை நடிகர் சதீஷ் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் கதாநாயகியாக குக் வித் கோமாளி பிரபல பவித்ரா லட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.