ஐஸ்வர்யாவை சரமாரியாக திட்டிய பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேல் சுவாரஸ்யம் இல்லாமலும் விறுவிறுப்பு இல்லாமலும் சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டு நாட்களாக டென்ஷனை அதிகரிக்கும் வகையிலும் அருவருக்கத்தக்க வகையிலும் மாறி வருகிறது. ஐஸ்வர்யாவின் அட்டகாசம் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ''பைத்தியம் பிடிச்ச லூஸ், கிறுக்கி, மெண்டல், சைக்கோ என சரமாரியாக திட்டி, லூஸ் ஐஸ்வர்யாவுக்கு பொன்னம்பலம் தான் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சதீஷின் இந்த டுவீட்டுக்கு பதில் அளித்த இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சமீபத்தில் எவிக்சன் ஆனவருமான ரம்யா, 'ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை பார்த்து நான் மிகவும் அப்செட் ஆகிவிட்டேன்' என்று கூறியுள்ளார். பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் வெறுக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மாறி கொண்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே கருதப்படுகிறது.
Paithiyam pudicha loose kirukki mental psycho..... Waiting for Ponnambalam annan’s Palaar?? to #Loosevarya
— Sathish (@actorsathish) August 1, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments