2 வருஷம் ஆயிருச்சு: மனைவி, மகளுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்த சதீஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இரண்டு வருட இனிமையான நினைவுகள் என்ற கேப்ஷன் உடன் நடிகர் சதீஷ் பகிர்ந்து உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சதீஷ் என்பதும் தற்போது அவர் காமெடி வேடங்களில் மட்டுமின்றி, ‘நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி நடிகர் சதீஷ் சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு நிஹாரிகா என்று பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் நிறைவு பெற்று விட்டதாக மனைவி குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை நடிகர் சதீஷ் வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Two years of togetherness ?????? pic.twitter.com/DHUwcH8cXn
— Sathish (@actorsathish) December 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com