இந்த ஒரு நாளுக்காகத்தான் 25 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன்: புதுமாப்பிள்ளை சதீஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியானது என்பது தெரிந்ததே
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சதீஷ் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. நடிகர் சதீஷுக்கு இன்றுதான் திருமணம் என்பதும் திருமண நடக்கும் நாளில் அவர் ரஜினியின் படத்தில் நடிக்கவிருக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவே சதீஷுக்கு மிகப்பெரிய திருமண பரிசாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
‘தலைவர் 168 படத்தில் இணைவது குறித்து சதீஷ் கூறியதாவது: கடந்த 25 வருடங்களாக இந்த ஒரு நாளுக்காகத்தான் ஏங்கி கொண்டிருந்தேன். என்னுடைய திருமணம் இன்று நடந்ததை கூறுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். என்னுடைய பல வருட கனவு இன்று நனவாகிறது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த சிறுத்தை சிவா, கலாநிதி மாறன் மற்றும் தலைவர் சூப்பர் ஸ்டார் ஆகியோர்களுக்கு எனது நன்றி. இதைவிட பெரிய திருமண பரிசு எனக்கு வேறு எதுவும் இல்லை’ என்று சதீஷ் கூறியுள்ளார்.
.@actorsathish joins the cast of #Thalaivar168 .
— Sun Pictures (@sunpictures) December 11, 2019
Congratulations @actorsathish on your wedding today and our best wishes to the newly married couple!
@rajinikanth @directorsiva pic.twitter.com/Dbnn7Oniaz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com