சதீஷின் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'.. டப்பிங்கில் நடந்த குளறுபடி.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக சதீஷ் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்த நிலையில் இது குறித்த வீடியோ ஒன்றை படத் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் ’விடிவி கணேஷ் வெளிநாட்டில் இருப்பதாகவும், அதனால் அவர் டப்பிங் பேச வர முடியவில்லை என்றும், அவருக்கு பதிலாக அவருடைய குரலில் நீங்களே பேசுங்கள் என்றும் சதீஷை கூறுகிறார்.
இதனை அடுத்து சதீஷ், விடிவி கணேஷ் போல பேச முயற்சிக்கிறார். அப்போது திடீரென விடிவி கணேஷ் டப்பிங் தியேட்டருக்கு வர, ஒரே களேபரம் ஆகிறது. இதுகுறித்த காமெடியான வீடியோவை ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24 ஆவது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சதீஷ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். . செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Catch @actorsathish and #VTVGanesh indulging in atrocities during the dubbing of #AGS24 titled #ConjuringKannappan
— AGS Entertainment (@Ags_production) November 3, 2023
Coming Soon in Theatres...
Produced by @Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh
Directed by @selvinrajxavier@archanakalpathi… pic.twitter.com/wiAt5t2IjH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments