சதீஷின் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'.. டப்பிங்கில் நடந்த குளறுபடி.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக சதீஷ் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்த நிலையில் இது குறித்த வீடியோ ஒன்றை படத் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் ’விடிவி கணேஷ் வெளிநாட்டில் இருப்பதாகவும், அதனால் அவர் டப்பிங் பேச வர முடியவில்லை என்றும், அவருக்கு பதிலாக அவருடைய குரலில் நீங்களே பேசுங்கள் என்றும் சதீஷை கூறுகிறார்.

இதனை அடுத்து சதீஷ், விடிவி கணேஷ் போல பேச முயற்சிக்கிறார். அப்போது திடீரென விடிவி கணேஷ் டப்பிங் தியேட்டருக்கு வர, ஒரே களேபரம் ஆகிறது. இதுகுறித்த காமெடியான வீடியோவை ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24 ஆவது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சதீஷ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். . செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிட்டியில என்னை தவிர வேற எந்த ரவுடியும் இருக்கக்கூடாது: விக்ரம் பிரபுவின் 'ரெய்டு' டிரைலர்..!

 விக்ரம் பிரபு நடித்த 'ரெய்டு' என்ற திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

ஐஸ்வர்யா ராஜேஷின் காமெடி படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

துவார்கா புரடொக்சன்ஸ் தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில்

'ஜவான்' உள்பட 5 தமிழ்ப்படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' உள்பட இந்த வாரம் 5 தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.  

பெண் போட்டியாளரை ஜெயிலுக்கு அனுப்பிய கேப்டன் பூர்ணிமா.. பிரதீப் எப்படி தப்பித்தார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் இன்று ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'லியோ' வெற்றி விழா முடிந்ததும் தாய்லாந்து பறந்த விஜய்.. மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.