முதல்வர், துணை முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சதீஷூக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமண வேலையை இருவீட்டார்களும் கவனித்து வரும் நிலையில் நடிகர் சதீஷ் தனது திருமண அழைப்பிதழை பிரபலங்களுக்க்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த நிலையில் முதல்கட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று நேரில் சந்தித்த நடிகர் சதீஷ், தனது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.
அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார். மேலும் இன்னும் ஒருசில அரசியல் தலைவர்களுக்கும் முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் அவர் திருமண அழைப்பிதழ்களை வழங்க திட்டமிட்டுள்ளார்.
நமது தமிழக முதல்வர் மாண்புமிகு @CMOTamilNadu ஐயா மற்றும் துணை முதல்வர் மாண்புமிகு @OfficeOfOPS ஐயா அவர்களிடம் எனது திருமண அழைப்பிதழை அளித்தபோது ???????????? pic.twitter.com/pT2nsLX1Cu
— Sathish (@actorsathish) November 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com