'வா மச்சி நம்பர் கேட்டு பார்ப்போம்: தமிழ் நடிகையின் சின்ன வயது போட்டோவுக்கு சதீஷ் கமெண்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகை தனது சமூக வலைத்தளத்தில் சின்ன வயது போட்டோவை பதிவு செய்த நிலையில் அந்த போட்டோவுக்கு தனது சின்ன வயது புகைப்படத்தை பதிவு செய்த நடிகர் சதீஷ் ’வா மச்சி நம்பர் கேட்டு பார்ப்போம்’ என்று பதிவு செய்துள்ளது சமூக வலைத்தளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரம்யா இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் பிஸியாக உள்ளார். விதவிதமாக வொர்க்-அவுட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னத்தின் ’ஓகே கண்மணி’ மற்றும் அமலா பால் நடித்த ‘ஆடை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ரம்யா கைவசம் தற்போது ஒருசில திரைப்படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ரம்யா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யாரென்று கண்டுபிடியுங்கள் என்றும் அவர் ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இந்த புகைப்படத்திற்கு பதிலடியாக நண்பனுடன் இருக்கும் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை பதிவு செய்த நடிகர் சதீஷ், ’வா மச்சி நம்பர் கேட்டுப் பார்ப்போம்’ என்று கமெண்ட் அடித்துள்ளார்.
ரம்யாவின் சின்ன வயது புகைப்படமும், அதற்கு பதில் புகைப்படம் பதிவு செய்த சதீஷின் கமெண்ட்டும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Vaa machi number kettu paappom ?????? https://t.co/M8umpIETEC pic.twitter.com/aTd88Dk3u1
— Sathish (@actorsathish) August 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments