அடுத்த வாரம் திருமணம்.. விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்.. மருத்துவமனையில் அனுமதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அடுத்த வாரம் பிரபல நடிகருக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அவர் திடீரென இன்று விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சர்வானந்த். தமிழில் ’எங்கேயும் எப்போதும்’ ’ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்பட ஒரு சில படங்களிலும் தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் அமலா நடித்த ’கணம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வரும் ஜூன் 3ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமண ஏற்பாடுகளை சர்வானந்த் மும்முரமாக கவனித்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஹைதராபாத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
கார் அதிவேகமாக சாலை ஓரத்தில் இருந்த டிவைடரில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாகவும் ஆனால் காரின் ஏர்பேக்குகள் காரணமாக சர்வானந்த் லேசான காயம் அடைந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். நடிகர் சர்வானந்த்துக்கு பெரிய அளவில் காயம் ஏதுமில்லை என்றும் முதலுதவி சிகிச்சை மட்டும் எடுத்துக் கொண்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து நடிகர் சர்வானந்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘இன்று காலை எனது கார் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் சிறிய சம்பவம். உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் நான் வீட்டில் முற்றிலும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் அக்கறைக்கு அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் இனிய ஞாயிறு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments