நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதியா? என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திக்கு சரத்குமார் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சரத்குமார் தற்போது விஜய் நடிக்கும் ’வாரிசு’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சரத்குமார் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற நிலையில் திடீரென அவருக்கு வயிறு கோளாறு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் சரத்குமார் தரப்பு இந்த செய்திக்கு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‛சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments