ரஜினி, கமல் படத்தில் நடித்த சரத்பாபு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் இன்று சரத் பாபு காலமானார் என்ற செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சரத்பாபு காலமானதாக வதந்தி கிளம்பிய நிலையில் இன்று அவர் காலமானார்.
கடந்த 1977 ஆம் ஆண்டு ’பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன் பின்னர் அவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’நிழல் நிஜமாகிறது’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய படங்களில் ஒன்று ரஜினியின் ’முள்ளும் மலரும்’ என்பது குறிப்பிடத்தக்கது.
கமல், ரஜினி ஆகிய இருவருக்கும் நண்பராக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 200 படங்களுக்கு மேல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சரத்பாபு இன்று காலமானதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments