மாறுவேடத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தியேட்டரில் பார்த்த பிரபல தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூபாய் 500 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது என்பது தெரிந்ததே.
ரசிகர்கள் மட்டுமின்றி இந்த படத்தை திரையுலக பிரபலங்களும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தை தமிழ் பிரபல நடிகர் ஒருவர் மாறுவேடம் போட்டு சென்னை திரையரங்கில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பிரபல நடிகர் சந்தானம் தான்.
நடிகர் சந்தானம் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் பார்ப்பதற்காக மாறுவேடம் போட்டு சென்றதாகவும் ரசிகர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் இவ்வாறு செய்ததாகவும், சந்தானம் நடித்து வரும் ’குலுகுலு’ படத்தின் இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ’குலுகுலு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ’குலுகுலு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்தது.
With GulluBhai @iamsanthanam na for #RRR. #GuluGulu#GuluGuluwrap pic.twitter.com/TSUmuLuvnb
— Rathna kumar (@MrRathna) March 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments