மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க: 'ஜெய்பீம்' குறித்து சந்தானம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் குறித்து சர்ச்சையை ஒரு சிலர் எழுப்பி வருகின்றனர் என்பதும் இதனால் திரைஉலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும், குறிப்பாக பாரதிராஜா, வெற்றிமாறன், நாசர் உள்ளிட்டோர் சூர்யாவுக்கு பக்கபலமாக கருத்துக்களை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சந்தானம் ‘ஜெய்பீம்’ படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ’ஒருவரை உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றவரை குறை சொல்வது சரியல்ல என்றும், திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையானதல்ல என்றும் கூறினார். ஒருவருக்கு இந்து மதம் பிடித்து இருந்தால் அந்த மதத்தை பற்றி உயர்வாக சொல்லலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மற்ற மதத்தை பற்றி குறைவாக சொல்லக் கூடாது என்பதே என்னுடைய கருத்து என்றும் மேலும் மக்கள் தெளிவா இருக்காங்க. என்ன மாதிரி, எந்த சமூகம், எந்த சாதியை வைத்து படம் எடுத்தாலும் மக்கள் படத்தை வந்து பார்த்து முடிச்சிட்டுப் போய்டுறாங்க. எல்லா சாதி மக்களும் ஒன்னாதான் வந்து படம் பார்க்கிறாங்க. யாரை வேண்டுமென்றாலும் உயர்த்திப் பேசுங்க. ஆனால், அடுத்தவரை தாழ்த்தி பேசவேண்டாம். அது தேவையில்லாத விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா என்பது இரண்டு மணி நேரம் பொழுதுபோக்காக பார்க்க வரும் ஒரு அம்சம் என்றும், அந்த சினிமாவை அனைத்து ஜாதி மதத்தினர்களும் பார்க்க வரும் நிலையில் ஒருவரை உயர்த்தி இன்னொருவரை தாழ்த்தி சொல்ல கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த திரையுலகமே ‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சந்தானம் நடுநிலையான ஒரு கருத்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout