செட்டில் இருந்த நடிகர் சல்மான் கானுக்கு காயம்… வைரல் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் சல்மான்கான் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது காயம் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் சல்மான் கான் தற்போது ஸ்பை த்ரில்லர் படமான ‘டைகர் 3’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப் ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக இம்ரான் ஹாஷ்மி மற்றும் கேமியோ ரோலில் நடிகர் ஷாருக்கானும் நடக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது நடிகர் சல்மான் கானுக்கு தற்போது காயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து, படப்பிடிப்பு தளத்தில் 5 கிலோ எடையுள்ள டம்பள்ஸை தூக்கி என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன் என்று கூறி, இடது தோள் பட்டையில் பேண்டேஜ் போட்டுள்ள புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.
டைகர் 3 திரைப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிடும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மத் தீவில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிப்புக்காக கடின உழைப்பை செலுத்தும் நடிகர் சல்மான் கானுக்கு காயம் ஏற்பட்டு இருப்பது குறித்து அவரது ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments