கொரோனாவால் தந்தையை இழந்த சிறுவனுக்கு… பாலிவுட் சூப்பர் ஸ்டார் செய்த உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முத்திரைப் பதித்த நடிகர் சல்மான்கான். சல்லு பாய் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்கிறார். இவர் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களைக் கொடுத்தும் உணவுப் பொட்டலங்களை கொடுத்தும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உதவி செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கர்நாடகாவில் கொரோனாவால் தந்தையை இழந்த 18 வயது சிறுவன் தனது படிப்புக்கு உதவி செய்யுமாறு டிவிட்டரில் பதிவிட்டு உள்ளான். இந்த டிவிட்டர் பதிவை பார்த்த சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர், நடிகர் சல்மான் கானின் கவனத்திற்கு இந்தத் தகவலை கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து கொரோனா நோய்த்தொற்றால் தந்தையை இழந்த சிறுவனுக்கு நடிகர் சல்மான் கான் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.
மேலும் சிறுவனது கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு உதவி செய்வதாகவும் அதோடு எதிர்காலத்திற்கு தேவையான உதவிகளைச் செய்வதாகவும் நடிகர் சல்மான்கான் உறுதி அளித்துள்ளார். இந்த தகவலை அடுத்து நடிகர் சல்மான் கானுக்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தவிர நடிகர் சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேஎஃப் தற்போது கொரோனா பாதிப்புகளுக்கு நிவாரணத்தைத் திரட்டிக் கொடுக்கவும் முன்வந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யவும் இந்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout