ஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த சீரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவரை தான் பாராட்டுவதாகவும் வீடியோ ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நடிகை ரோஜா மேலும் கூறியதாவது
கொரோனா வைரஸிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் அது ஒரு ஜலதோஷம் போல் முடிந்து விடும். ஆனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் உயிரே போய்விடும். தற்போது டெல்லியில் இருந்து வந்தவர்களால் கொரோனா அதிகமாக பரவுவதாக கூறுகிறார்கள். இவரகள் போன்றவர்களை பார்த்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யுங்கள். மருத்துவர்கள்14 நாட்களில் உங்களுக்கு கொரோனா இருக்கின்றதா? இல்லையா என்பதை கண்டுபிடித்து முடிவைச் சொல்லி விடுவார்கள். இதனால் நீங்கள் நன்றாக இருப்பது மட்டுமன்றி சமுதாயத்தில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும் ஒரு நல்ல மனிதராக இருப்பீர்கள்.
இந்த நிலையில் ஒரு குடும்பத் தலைவராக இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தமிழ்நாட்டுக்கே ஒரு அப்பா மாதிரி, கொரோனா விஷயத்திற்காக ஜனங்களுக்காக பார்த்து பார்த்து செய்து வருகிறார். அவரை நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்’ என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்
நடிகை ரோஜா வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ #CoronaVirus | #Covid19 pic.twitter.com/shD8uvxSAE
— Polimer News (@polimernews) April 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments