கொரோனா நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த வித்தியாசமான முயற்சி
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று கூட 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் 119 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதும், இதனால் ஒரு சிலர் கொரோனா வார்டில் இருந்து தப்பிச் செல்வதும், தற்கொலை செய்வதுமான சம்பவங்கள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகிய இருவரும் இணைந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று பட்டுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களை பல குரலில் பேசி மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர். இதனால் கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் அவர்களுடைய மன அழுத்தத்தை போக்க இது போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்த வேண்டும் என்றும் ரோபோ சங்கர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது