பாஜகவில் திடீரென இணைந்த பிரபல நடிகர்-தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் அரசியலில் களம் புகுந்து பல்வேறு கட்சிகளில் இணைந்து வருவதும், ஒருசிலர் சொந்தமாகவே கட்சி ஆரம்பித்து வருவதும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஆகும்
அந்த வகையில் இன்று நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தற்போது திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்ட ஆர்.கே.சுரேஷ் பின்னர் கூறியதாவது:
எந்தவொரு கட்சியிலும் இதுவரை அடிப்படை உறுப்பினராக ஆனதே கிடையாது. இன்று தான் முதல் முறையாக அதிகாரபூர்வமாக ஒரு கட்சியில் இணைந்துள்ளேன். மோடியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தமிழகத்தில் பாஜகவை வளர்க்கப் பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறோம். வரும் 12-ம் தேதி மோடிஜி தமிழகத்துக்கு வருவதே பெரிய மாற்றமாக இருக்கும்.
தமிழகத்துக்குப் பல நல்ல காரியங்கள் பண்ணப் போகிறோம். மோடிஜி செய்த சில காரியங்கள் தெரியாமல் போய்விட்டன. ஆனால், மக்களிடம் போய் சேர்ந்துவிட்டது. சின்னச் சின்ன ஊர்களில் கூட மோடிஜி நினைத்தது நடந்துள்ளது. மக்கள் யாருமே #GoBackModi என்று ட்ரெண்ட் பண்ணுவதில்லை. அதற்கென்று ஒரு டீம் வைத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் இனிமேல் நடக்காது.
என்னை மாதிரி பல பேர் திரையுலகிலிருந்து பாஜகவில் இணையப் போகிறார்கள். வரும் தேர்தல் கண்டிப்பாகத் தமிழகத்தில் பெரிய மாற்றமாக இருக்கும் என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments