சமூக விலகலை கடைபிடிக்க கூறிய 'பொன்னியின் செல்வன்' நடிகருக்கு கொலை மிரட்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து நாட்டு அரசுகளும் கூறிவரும் ஒரே அறிவுரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான். கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் இப்போதைக்கு சமூக விலகலை தவிர வேறு மாற்று மருந்து இல்லை என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது. இந்த நிலையில் தனது வீட்டின் முன் சுமார் பத்து பேருக்க்கும் மேல் கும்பலாக கூடியிருந்தவர்களை சமூக விலகலை கடைபிடியுங்கள் என்றும் ஊரடங்கு உத்தரவை மதியுங்கள் என்றும் அறிவுரை கூறிய தமிழ் நடிகர் ஒருவரை தாக்க முயற்சித்ததோடு, கொலை மிரட்டல் விடுத்தும் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரையுலகின் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருபவரும், மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவருமான நடிகர் ரியாஸ்கான் சென்னையில் உள்ள பனையூர் ஆதித்யாராம் நகர் 8வது தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா ரியாஸ்கான் ஒரு பிரபல குணச்சித்திர நடிகை என்பதும் இவர்களது மகன் ஷாரிக் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் ரியாஸ்கான் வீட்டின் முன்னர் சுமார் 10 பேர் கும்பலாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ரியாஸ்கான், ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இப்படி கும்பலாக நிற்க வேண்டாம் என்றும் சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார். இதனால் அவருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் ஒரு கட்டத்தில் ரியாஸ்கானை அந்த கும்பலில் இருந்த ஒரு சிலர் தாக்க முயற்சித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது
இதனை அடுத்து காவல் நிலையத்தில் ரியாஸ்கான் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரியாஸ்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறிய தமிழ் நடிகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments