நயன்தாராவுடன் டான்ஸ் ஆடிய நடிகரை பார்த்து ஆத்திரமடைந்த விக்னேஷ் சிவன்

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தி நடித்திருந்த ராகுல் தாத்தா நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார் என்பது தெரிந்ததே. சிவாஜி, எம்ஜிஆருடன் நடித்த சீனியர் நடிகரான இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் 'நயன்தாராவுடன் நான் டான்ஸ் ஆடியதால் அவருடைய அன்புக்குரியவரான விக்னேஷ் சிவனுக்கு என் மீது கோபம்' என்று நகைச்சுவையாக கூறினார்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நயன்தாராவுக்கு காதல் கடிதம் எழுதி நயன்தாராவையே அசரவைத்த இந்த ராகுல் தாத்தாவுக்கு ஒரு பெரிய ஆசையாம். தான் இயக்கும் படம் ஒன்றில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் கணவன், மனைவியாக நடிக்க வேண்டும் என்றும், அந்த படத்தில் தான் விஜய்சேதுபதியின் அப்பாவாக நடிக்க வேண்டும் என்றும் ஆசையாம்,

ராகுல் தாத்தாவின் ஆசையை விஜய்சேதுபதியும், நயன்தாராவும் நனவாக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஜோதிகாவை புகழ்ந்த காமெடி நடிகருக்கு நன்றி கூறிய சூர்யா

நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த நிலையில் '36 வயதினிலே' படத்தின் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்

ஆன்மீக சுவாமி மலையாறிவிட்டார்: ரஜினியை கிண்டல் செய்த அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் காலா' மற்றும் '2.0' படப்பிடிப்பு காரணமாக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இமயமலை செல்லவில்லை

விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நட்சத்திர ஜோடி

நேற்று கீர்த்தனா, அக்சய் தம்பதிகளை நேரில் சந்தித்து தளபதி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

'உன்னை நினைத்து' படத்தை ஞாபகப்படுத்தும் அஸ்வினி-அழகேசன் காதல்

சென்னையில் நேற்று மாலை கல்லூரி மாணவி அஸ்வினி, அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

யுவன்ஷங்கர் ராஜாவின் மறுபக்கம்: மனைவி சொல்லும் ரகசியம்

பொதுவாக திரையுலகில் யுவன்ஷங்கர் ராஜா என்றால் அமைதியானவர், கோபப்படாதவர், ரெக்கார்டிங் போது கூட வேலையில் மட்டும் மும்முரமாக இருப்பவர் என்றுதான் அறியப்பட்டதுண்டு.