பாத்ரூமில் ரகசிய கேமிரா வைத்து வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி: பிரபல நடிகரின் அறிவுரை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கல்லூரி ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து குளிக்கும் கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை தனது காதலனுக்கு அனுப்பிய மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து பிரபல நடிகர் ஒருவர் தனது டுவிட்டரில் அறிவுரை கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவிகள் தங்கும் ஹாஸ்டலில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து அதனை தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார்.
இது கடந்த சில நாட்களாக நடந்துள்ள நிலையில் 60க்கும் மேற்பட்ட குளிக்கும் பெண்களின் வீடியோவை தனது காதலருக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோக்களில் ஒரு சில சமூக வலைதளங்களில் வைரலானதால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட மாணவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பிரபல நடிகர் சோனு சூட் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் நம் சகோதரிகளுக்கு நாம் துணையாக நிற்க வேண்டிய நேரம் இது என்றும் அப்படி செய்தால் தான் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இது சோதனையான காலம்தான் என்பதால் அனைவரும் பொருப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
Something that happened in Chandigarh University is very unfortunate. It’s time for us to stand with our sisters and set an example of a responsible society. These are testing times for us, not for the victims.
— sonu sood (@SonuSood) September 18, 2022
Be responsible ??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments