அதிமுகவுடன் கூட்டணி எதிரொலி: பாமகவில் இருந்து பிரபல நடிகர் விலகல்!

அதிமுகவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சனம் செய்த பாமக, திடீரென 7 மக்களவை தொகுதிக்காகவும், ஒரு மாநிலங்களவை தொகுதிக்காகவும் அதே அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. இந்த கூட்டணியை அரசியல் விமர்சகர்களும் பொதுமக்களும் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாமக பிரமுகர் ராஜேஷ்வரி அக்கட்சியில் இருந்து விலகி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று நடிகரும் பாமகவின் துணைத்தலைவருமான ரஞ்சித் பாமகவில் இருந்து விலகியுள்ளார். அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம்? என்றும் 4பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது என்றும் அவர் விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
 

More News

புல்வாமா மட்டுமின்றி காந்தகாருக்கும் சேர்த்து பழிதீர்த்த இந்தியா!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கியதோடு

அருண்விஜய்யின் 'தடம்' படத்தின் கச்சிதமான ரன்னிங் டைம்!

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதலமைச்சர் கோப்பையை கைப்பற்றிய சுசீந்திரன் பட நடிகைகள்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'கென்னடி கிளப்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2: மொத்த ஸ்வீட்டையும் தானம் வழங்கிய கடை ஓனர்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவே குரல் கொடுத்த நிலையில் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை

பக்கா பிளான்: எம்ப்ரேயர் விமானத்தால் சாத்தியமான சக்சஸ் தாக்குதல்

இன்று அதிகாலை இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து வெற்றிகரமாக தீவிரவாதிகளின் முகாம்களை அழித்து எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி திரும்பி வந்தன.