பாமகவில் இருந்து விலகிய ரஞ்சித்தை இணைத்து கொண்ட பிரபல கட்சி!

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத்தலைவரான ரஞ்சித் விலகினார் என்பதை நேற்று பார்த்தோம். அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிவிட்டு அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை தன்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று ரஞ்சித் பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார்

இந்த நிலையில் நேற்று பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் இன்று டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வில் இணைந்தார். சற்றுமுன் புதுச்சேரியில் இருந்த டிடிவி தினகரனை சந்தித்த அவர் தன்னை அம்முகவில் இணைத்து கொண்டார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடவுள்ள நிலையில் ரஞ்சித்துக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.