பாமகவின் துணைத்தலைவராக பிரபல நடிகர் நியமனம்

  • IndiaGlitz, [Tuesday,September 18 2018]

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்த்து வரும் அரசியல் கட்சியான பாமகவின் துணை தலைவராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1993ஆம் ஆண்டு 'பொன்விலங்கு' படத்தில் அறிமுகமான நடிகர் ரஞ்சித் அதன் பின்னர் 'சிந்துநதிப்பூ', 'மறுமலர்ச்சி', 'நினைத்தேன் வந்தாய்', 'சபாஷ், நரசிம்மா' உள்பட பல திரைப்படங்களில் ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பாமகவில் இணைந்த நடிகர் ரஞ்சித்துக்கு அக்கட்சியின் தலைமை அவருக்கு பாமகவின் துணைத்தலைவர் பதவியை அளித்துள்ளது.

அதிமுகவின் பேச்சாளராக இருந்த நடிகர் ரஞ்சித், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தபின்னர் அதிமுகவில் இருந்து ஒதுங்கியிருந்த ரஞ்சித் சமீபத்தில் பாமகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.