விசுவாசம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Thursday,May 10 2018]

தல அஜித், நயன்தாரா நடித்து வரும் 'விசுவாசம்' திரைப்படத்தில் ஏற்கனவே ரோபோசங்கர் யோகிபாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி ஆகிய காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்ற செய்தி வெளிவந்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் ரமேஷ் திலக் இணைந்துள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் அவர் விசுவாசம்' படப்பிடிப்பில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

கிராமப்புற பின்னணியில் இந்த படத்தின் கதையம்சம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.இமான் இசையமைக்கும் விசுவாசம்' படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.