அரசாங்கம் இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகவேண்டும்: ஓட்டு இல்லாத நடிகர் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா இன்று தனது ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதற்காக காலை ஆறு மணி முதல் வரிசையில் நின்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் ரமேஷ் கண்ணா கூறியபோது, 'எனக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்கின்றது. நான்கைந்து முறை இதே பூத்தில்தான் ஓட்டு போட்டுள்ளேன். இப்போது எனக்கு ஓட்டு இல்லை என்றும் என் மனைவிக்கு மட்டும் ஓட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரே வீட்டில் கணவனுக்கு ஓட்டு இல்லை, மனைவிக்கு ஓட்டு இருக்கின்றது. இது யார் தவறு? அரசாங்கம் இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
தேர்தலின்போது ஓட்டு போடுங்கள் என்று சொன்னால் மட்டும் பத்தாது. தேர்தல் ஆணையம் தனது வேலையை சரியாக செய்ய வேண்டும். என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்கு யார் காரணம்? இப்போது என்னால் ஓட்டு போட முடியவில்லையே? இப்படி இருந்தால் யார் ஓட்டு போட வருவார்கள். சர்கார்' படம் வந்த பின்னர்தான் 49P என்பதே அனைவருக்கும் தெரிய வந்தது. இப்போது இதுக்கு ஒரு படம் வந்தால்தான் ஒரு தீர்வு கிடைக்குமா? என்று ஆவேசமாக கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments