நடிகர் ரமேஷ் அரவிந்தின் மகளா இவர்? சினிமா நடிகைகளை மிஞ்சும் கொள்ளை அழகு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் கடந்த 80 மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகர் ரமேஷ் அரவிந்த் மகள் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் ரமேஷ் அரவிந்துக்கு இவ்வளவு அழகான மகளா? என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரமேஷ் அரவிந்த். அதன்பின்னர் வசந்தகால பறவைகள், புதிய தென்றல், டூயட், சின்ன புள்ள, சதிலீலாவதி, பாட்டு வாத்தியார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ரமேஷ் அரவிந்த், கடந்த 1996-ம் ஆண்டு அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நிகாரிகா என்ற மகளும் அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ரமேஷ் அரவிந்து மகள் நிகாரிகாவின் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா ரமேஷ் அரவிந்தின் மகள்? சினிமா நடிகைகளை மிஞ்சும் கொள்ளை அழகு என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout