close
Choose your channels

பிரபல தமிழ் ஹீரோ மகள் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

Monday, December 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’உன்னாள் முடியும் தம்பி’ ’டூயட்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்த். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவியும் நிகாரிகா மற்றும் அர்ஜுன் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரமேஷ் அரவிந்தின் மகள் நிகாரிகாவின் திருமணம் இன்று நடந்துள்ளது. ரமேஷ் அரவிந்த் மகள் நிகாரிகாவுக்கும் அக்ஷய் என்பவருக்கும் இன்று திருமணம் இனிதே நடைபெற்றதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் சிறப்பாக நடந்ததாகவும் ரமேஷ் அரவிந்த் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று திருமண வாழ்வை தொடங்கும் தனது மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவருக்கும் தங்களின் மேலான ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள் தேவை என்று அவர் அதில் அன்புடன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் அரவிந்த் மகள் மற்றும் மருமகனுக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment