நடிகர் ராமராஜன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு இணையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த ராமராஜன் வீட்டில் திடீரென ஏற்பட்ட துக்கம் காரணமாக திரையுலகினர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கடந்த 1990களில் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன் என்பதும் அவருடைய பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் குறிப்பாக ’கரகாட்டக்காரன்’ தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகர் ராமராஜன் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது ’சாமானியன்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ராமராஜன் சகோதரி புஷ்பவதி என்பவர் மதுரை அருகே உள்ள மேலூரில் வசித்து வந்த நிலையில் அவர் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமாகிவிட்டார். மறைந்த புஷ்பவதிக்கு வயது 75. இந்த நிலையில் சகோதரி மறைவால் ராமராஜன் குடும்பத்தினர் சோகத்தில் இருக்கும் நிலையில் தனது அக்காவின் இறுதி சடங்கில் பங்கேற்க அவர் மேலூர் சென்று கொண்டிருப்பதாகவும் நாளை அவரது இறுதிச் சடங்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது

இந்நிலையில் ராமராஜன் சகோதரி எதிர்பாராத வகையில் காலமாகிவிட்ட நிலையில் அவருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.