இந்நாள் எம்பிக்கு முன்னாள் எம்பி வாழ்த்துகிறேன்.. இளையராஜாவுக்கு வாழ்த்து கூறிய நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா இன்று தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இளையராஜா தற்போது ராஜ்யசபா எம்பி ஆக இருக்கும் நிலையில் முன்னாள் எம்பி நடிகர் ராமராஜன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறிய போது ’இன்று இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்தநாள். அவரது பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய தேசத்தில் உள்ள ரசிகர்கள், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டின் பிறந்தநாளின் போது இசைஞானி இளையராஜாவிடம் சென்று வாழ்த்து கூறிய அவரிடம் ஆசி பெறுவேன், அந்த வகையில் இன்றும் அவருக்கு வாழ்த்து கூற வந்துள்ளேன். இன்று ராமராஜன் என்று மக்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு இளையராஜா எனக்கு அளித்த பாடல்கள் தான். இந்த நிலையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இளையராஜாவின் இசையில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். விரைவில் அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும்,
இளையராஜா எல்லோருக்கும் சிறப்பான பாடல்களை போட்டாலும் என்னுடைய பாடல்கள் கிராம சாயல் கொண்ட கதையம்சம் கொண்டதால் கூடுதலாக நல்ல பாடல்களை தருவார். இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று எம்பியாக இருக்கிறார், என்னை பொறுத்தவரை தமிழகத்தில் ஒரு இசையமைப்பாளர் எம்பி ஆக இருந்ததில்லை, எனவே இந்நாள் எம்பி இளையராஜாவை முன்னாள் எம்பி ராமராஜன் வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.
#Watch | “இன்னாள் எம்.பி .இளையராஜாவை முன்னாள் எம்.பி. ராமராஜன் வாழ்த்துகிறேன்!”
— Sun News (@sunnewstamil) June 2, 2023
‘இசைஞானி’ இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தப்பின் நடிகர் ராமராஜன் பேட்டி!#SunNews | #HBDIlaiyaraaja | #Ramarajan | @ilaiyaraaja pic.twitter.com/3VzMN7vAVv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments