ஈழத்தமிழர் பிரச்சனை என்பது இதுதான். ராஜ்கிரண் கூறும் நிதர்சன உண்மை
Thursday, April 13, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளில் ஒன்று ஈழத்தமிழர் பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நார்வே உள்பட பல நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பலமுறை முயற்சி செய்தும் இன்னும் தீராத பிரச்சனையாக உள்ளது. தமிழகத்தில் கூட ஈழத்தமிழர்களுக்காக போராடுவதற்கேன்றே பல கட்சிகள் உதயமாகியுள்ளன.
இந்த நிலையில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நடிகர் ராஜ்கிரண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: ஈழத்தமிழர் பிரச்சனை என்பது ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் பேசி முடிக்கும் சாதாரண பிரச்சனை அல்ல. இதுவொரு உலக அளவிலான அரசியல். இந்தியாவும் சிங்கள அரசும் இணைந்து சுமார் ஒண்ணேமுக்கால் லட்சம் தமிழர்களை அழித்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான போராளிகளை சித்ரவதை செய்தனர். இன்னும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. உலகில் எங்குமே நடக்காத கொடூரம் அங்கு நடந்துள்ளது.
இந்தியா இறையாண்மை உள்ள நாடு என்பது இந்த விஷயத்தில் காப்பாற்றப்படவில்லை. இந்தியாவும் இணைந்துதான் இந்த கொடூரத்தை செய்தது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏற்பாடு. இந்த விஷயத்தில் நம்மால் ஆதங்கப்பட மட்டுமே முடியும், நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே தவிர இதற்கான எந்த முயற்சியும் நம்மால் செய்ய முடியாது. இறைவன் ஒருவன் தான் இதற்கு நல்ல வழி காட்ட வேண்டும்
ஈழத்தமிழர்களுக்காக கட்சி ஆரம்பிப்பது, கூட்டத்தில் பேசுவது என்பது அனைத்துமே ஒரு நாடகம். இந்த பிரச்சனை ஒரு உலகளாவிய பிரச்சனை என்று தெரிந்தும் ஒருசிலர் அவர்களுடைய கட்சியை பலப்படுத்தி கொள்வதற்காகவும், சுயலாபத்திற்காகவும், சுய சம்பாத்தியதிற்காகவும் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். ஈழத்தமிழர்கள் பிரச்சனை அவர்களுடைய முன்னேற்றத்திற்கு மட்டுமே உதவுமே தவிர அவர்களால் ஈழமக்களுக்கு எந்தவித உதவியும் இருக்காது' என்று கூறினார்.
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த ராஜ்கிரணின் நிதர்சணமான இந்த கருத்தை அனைவரும் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments