நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரம்: தமிழ் நடிகரின் பொங்கல் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் ஹீரோ, குணசித்திர கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகர்களில் ஒருவராகிய ராஜ்கிரண், தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பொங்கல் வாழ்த்தில் நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரம் இதுதான் என கூறியுள்ளார். அவரது பதிவு இதோ:
நம் இந்திய நாடு, விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. சுதந்திரத்துக்குப் பின், நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களை கொள்ளையடித்ததோடு, நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்.
அதன் காரணமாக, இன்று நம் விவசாயப் பெருமக்கள், வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு,தற்கொலையும் பண்ணிக் கொள்கிறார்கள். விவசாயத் தொழிலை ஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப் பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இது போக, விவசாயம் பொய்த்துப் போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர்.
நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேர கட்டாயத்தில் இருக்கிறோம். நம்மாழ்வார் ஐயா அவர்கள், காட்டிச்சென்ற வழியைப் பின்பற்றி, இயற்கை விவசாயத்துக்கு மாறி, நம் மண்ணை உயிர்ப்பித்து, பயிர் செய்து, மதிப்புக் கூட்டு முறையில் வருமானத்தைப் பெருக்கி, விவசாய பெருமக்கள் தலை நிமிர்ந்து மகிழ்ச்சியோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கிறேன். இவ்வொரு அடி, மண்ணும், அதனுள் இருக்கும் கனிம வளங்களும், நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். அவற்றை நம் சந்ததியினருக்காக பேணிப் பாதுகாக்க, இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் என் மனம் கனிந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள். இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments