நாங்குநேரி அவலம்: பா ரஞ்சித், மாரி செல்வராஜை அடுத்து தமிழ் நடிகரின் ஆதங்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் மோகன் ஜி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ராஜ்கிரன் தனது சமூக வலைத்தளத்தில் நாங்குநேரி அவலம் என்று தனது ஆதங்கமான பதிவை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் பள்ளியில் படித்த காலங்களில்,
இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களை சார்ந்த மாணவர்களும்,பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர்,
நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று
எல்லா சாதிகளைச் சார்ந்த மாணவர்களும்
ஒன்றாகத்தான் படித்தோம்.
யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை.
ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக,
ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.
எங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்களும்
எல்லா சாதி மதமும் கலந்து தான்
இருந்தார்கள். அவர்கள் அனைவரும்
எவ்வித பேதமும் பார்க்காமல்,
எல்லா மாணவர்களையும் தங்களின்
சொந்தப் பிள்ளைகள் போல், அன்புடனும்
அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.
இன்று,மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது.
இப்படியான சூழல் எப்படி உருவானது ?
அந்தக்காலம் போல் இந்தக்காலமும்
மாறி விடாதா இறைவா என்று,
ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது...
#நாங்குநேரி அவலம்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com