இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள்: பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனது முகநூலில் இதுகுறித்து கூறியதாவது:

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாக புளித்துப்போன விசயம்.

இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும், பாமர மக்களின் மனங்களில் பிரிவினையை உண்டாக்குவதற்கான, நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக விதைத்து வந்தனர், வருகின்றனர்.

இந்த பொய்ப்பிரச்சாரங்கள் ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது. சத்தியத்தை யாராலும் புதைத்து விட முடியாது. இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள். இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற, இன்ன பிற கொடுமைகளால், அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து, சுய மரியாதையைப்பேணவும், சமத்துவத்தை அனுபவிக்கவும், அதற்கு வழி வகுத்துத்தந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள். ஒவ்வொரு மனிதனும், தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது, அவனவனுடைய அடிப்படை சுதந்திரம். இதை இந்திய அரசியல் சாசன சட்டம் உறுதி செய்திருக்கிறது. ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லையா, அதே போலத்தான் இதுவும்.

எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே என் தகப்பனாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மறவர் குலம். என் தாயாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்.

எனது மூதாதையர் காலத்தில், சேதுபதிச்சீமையில், பள்ளு, பறை என்று 18 சாதிகள் இருந்தனவென்றும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி, சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக் கொண்டார்கள் என்றும், என் தாயார் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்.

அதனால், எல்லா சாதியிலும் எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு. பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு. அதில் மனித நேயமே மாண்பு” என்று கூறியுள்ளார்.

More News

குடியுரிமை ரத்தானால் ஒரு பிரச்சனையும் இல்லை: எங்களுக்கு என ஒரு நாடு இருக்குது: சீமான்

குடியுரிமை ரத்து ஆனால் நித்தியானந்தாவின் கைலாஷ் நாட்டிற்கு சென்று விடுவோம் என நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை கல்லூரியில் தூக்கில் தொங்கிய பேராசிரியை: திடுக்கிடும் தகவல்

சென்னை கல்லூரியின் பேராசிரியை ஒருவர் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 52 வயது பூசாரி: சிசுவை வீட்டில் புதைத்த பெற்றோர்!

16 வயது சிறுமி ஒருவரை 52 வயது பூசாரி கர்ப்பமாக்கிய நிலையில் சிறுமிக்கு பிறந்த சிசுவை அவருடைய பெற்றோர் வீட்டின் பின்னால் புதைத்த கொடூரம் தூத்துக்குடி அருகே நடந்துள்ளது 

கமல்ஹாசனிடம் பேசியது என்ன? முக ஸ்டாலின் விளக்கம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் திமுக, இன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமை

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 29 வயது பெண் செய்த திடுக்கிடும் மோசடி!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடி செய்த 29 வயது பெண் குறித்த திடுக்கிடும் மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது