'என்னை மன்னித்துவிடுங்கள்': திருமணமான ஒரே வருடத்தில் கதறி அழுத ராஜ்கிரண் வளர்ப்பு மகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா என்பவர், தொலைக்காட்சி சீரியல் நடிகர் முனீஸ் ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
முனீஸ்ராஜா ஒரு மட்டமான புத்தி கொண்டவர் என்றும் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமானவர் என்றும் அது மட்டும் இன்றி ஜீனத் பிரியா தனது உண்மையான மகள் இல்லை என்றும் அவர் தனது வளர்ப்பு மகள் என்றும் தன்னுடைய பேச்சை மீறி திருமணம் செய்து கொண்ட அவருக்கும் எனக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்ட ஜீனத் பிரியா ஒரே வருடத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’நான் முனீஸ்ராஜாவை கடந்த ஒரு ஆண்டு திருமணம் செய்தேன். இப்போது இரண்டு மாதங்களாக நாங்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்கிறோம். எங்கள் திருமணம் சட்டபூர்வமான திருமணம் கிடையாது. இந்த திருமணத்திற்காக என் அப்பாவை மிகவும் நான் மனம் நோகடிக்க செய்துவிட்டேன்..
இவ்வளவு செய்த பின்னரும் கூட எனக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது அவர் வந்து உதவினார். இது நான் எதிர்பாராத கருணை, தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் அப்பா’ என்று கண்ணீருடன் கதறி அழுதவாறு ஜீனத் பிரியா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments