நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணம்; தொடங்கிய புள்ளிகள்...
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று தனது அரசியல் கருத்தைத் தெரிவித்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். அந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆளும் தரப்பை மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வரலாற்றையே கேள்விக்குள்ளாக்குவதாக தொலைக்காட்சிகளில் விவாதக் கூட்டங்களும் நடத்தப் பட்டன.
1996 முதலே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் எதிர்ப் பார்த்த நிலையில் 2017 இல் தான் அதற்கு அச்சாணி வைக்கப் பட்டது. இதற்கு பின்னர் ரசிகர் மன்றம் என்பது ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப் பட்டது. தனது மக்கள் மன்றத்துக்கு மாவட்ட செயலாளர்களையும் அவர் நியமித்தார்.
1995 இல் பாட்ஷா திரைப்பட விழாவில் “தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது“ என்று பேசி இருந்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம். வீரப்பன் அப்போது அமைச்சர் பதவியில் இருந்ததால் தனது பதவியையும் இழக்க நேரிட்டது.
பின்னர் 1996 இல் திமுக வுக்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்தார். அன்றைய திமுக வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் ஜி.கே. மூப்பனார் கூட்டணியில் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அவ்வபோது தனது அரசியல் சித்தாந்தங்களை படத்தில் நறுக்குத் தெறித்தார் போல தெரிவித்து மக்களை எதிர்ப்பார்பிலேயே வைத்திருந்தார். மூத்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கப் பின்னர் அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தக் கருத்துக்கு அதிமுக, திமுக இரண்டுமே போட்டிப் போட்டிக்கொண்டு வெற்றிடம் இல்லை என்கிற ரீதியில் பதிலும் அளித்து வந்தன.
முன்னதாக 2017 இல் “போர் வரும் போது, வருவேன்“ என ரசிகர்களை சந்தித்த போது தெரிவித்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி “நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார். அவரது கொள்கை குறித்தும் அலசுவதற்கான வாய்ப்பாக ஆன்மீக அரசியலில் இறங்கப் போகிறேன் எனவும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தார். அரசியல் மட்டங்களில் காணப்படுகிற கொள்கை குறித்த தத்துவார்த்தங்களை கேட்டு தலை சுற்றி விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லையா என்ற கேள்வி எழுந்தபோது எனது இலக்கு சட்ட மன்ற தேர்தலே எனத் தெரிவித்து இருந்தார். ஆனாலும், செய்தியாளர் சந்திப்புகளில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் தனது கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டே வந்தார். 2019 நவம்பர் மாதத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “2021 – ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அற்புதத்தை, அதிசயத்தை 100 க்கு 100 சதவீதம் தமிழக மக்கள் நிகழ்த்த போகிறார்கள்” எனவும் தெரிவித்து இருந்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது “சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர், எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் நாடு சுடுகாடு ஆகிவிடும்“ என்று அவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின என்பதும் குறிப்பிடத் தக்கது.
Demonization, GST, CAA விற்கு ஆதரவு போன்ற தேசிய அரசியலுடன் நெருக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்றும் இவர் மீது விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. கடந்த மாதம் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழா கூட்டத்தில் திராவிடத் தலைவர் பெரியார், சேலம் பகுத்தறிவு மாநாட்டில் ராமரை செருப்பால் அடித்ததாகக் கருத்து கூறினார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தனது நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பெயர், கொடி குறித்து விவாதித்தாக செய்திகள் வெளியாகின. அக்கூட்டத்தில் எனக்குப் பதிலாக வேறு ஒருவர் முதல்வர் பதவியில் அமர வைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று செயலாளர்களைப் பார்த்து கேட்ட நிலையில் அவர்கள் அதிர்த்து போனதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான விளக்கங்களைத் தற்போது அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
1996 இல் இருந்து அரசியலுக்கு வரவேண்டும் என என்னைக் குறித்து செய்திகள் வெளியாகின. நான் 2017 க்குப் பிறகே அரசியலைப் பற்றிச் சிந்தித்தேன் என்பதான விளக்கத்தையும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout