ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை முடித்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஜூலை 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினி தரப்பில் இருந்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பில் என்ன ஆலோசனை செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக அரசியலுக்கு வரப்போவதாக உறுதியாக தெரிவித்து வந்த நிலையில் திடீரென உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை எதற்காக சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.