ரஜினிக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? மருத்துவமனை வட்டாரங்களின் அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,October 29 2021]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று இரவு சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு வழக்கமான மருத்துவ சோதனை நடைபெறுவதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் கூறியிருந்தார்
இந்த நிலையில் தற்போது மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின் படி ரஜினிக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்கள் போதிய இரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போனதை குறிக்கும் என்றும், ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் கிழிந்து போகுதல் ரத்தப்பாதை தானாகவே சுருங்குதல், ரத்தக்குழாய்க்கு ஏற்படும் வெளிப்புறம் அழுத்தத்தை குறிக்கும் நோய் என்று கூறப்படுகிறது
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை பெற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது என மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து அவருக்கு ரத்தநாள குழாயை சரி செய்யும் சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் உடல் நலம் குறித்து விரைவில் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.