மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து அரிய தகவல்கள்: நடிகர் ராஜேஷ்
- IndiaGlitz, [Tuesday,December 25 2018]
மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் நடிகர் ராஜேஷ், எம்ஜிஆர் குறித்த சில அரிய தகவல்களை கூறியுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டு இலங்கையில் பிறந்து, மீண்டும் கேரளாவில் வளர்ந்து அதன்பின் தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராகவும், ஒப்பற்ற அரசியல் தலைவராகவும் திகழ்ந்தவர் எம்ஜிஆர். அவர் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்ததால் தான் அவரது முகத்தில் ஒரு ராஜகளை இருந்தது.
எம்ஜிஆரின் இரண்டாவது திருமணத்தின்போது அவர் குதிரை வண்டியில்தான் மாப்பிள்ளையாக வந்தார். திருமணத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்புதான் மணமேடைக்கு வந்து தாலி கட்டினார்.
எல்லா நடிகர்களை போலவே எம்ஜிஆரும் ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து, பெரிய இயக்குனர்களிடம் வலிய போய் வாய்ப்பு கேட்டவர். அவர் வாய்ப்பு கேட்டவர்களில் ஒருவர் தான் இயக்குனர் பீம்சிங். சிவாஜியை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய பீம்சிங், எம்ஜிஆருடன் நல்ல நட்புடன் இருந்தாலும் எம்ஜிஆருக்கு கடைசி வரை தனது படத்தில் வாய்ப்பு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1980ஆம் ஆண்டு எம்ஜிஆரின் ஆட்சியை இந்திரா காந்தி கலைத்தவுடன் சில மாதங்கள் எந்த வேலையும் ஓய்வில் இருந்தார் எம்ஜிஆர். அப்போதுதான் அவர் நிறைய சினிமாவை பார்க்க ஆரம்பித்தாராம். அன்றைய சினிமா டிரெண்ட் என்ன? என்பதை தெரிந்து கொண்டு பாரதிராஜா, பாக்யராஜ், இளையராஜா போன்றவர்களின் திறமைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து கூறினார். இந்திரா காந்தி, எம்ஜிஆரின் ஆட்சியை கலைக்காமல் இருந்திருந்தால் இந்த பாராட்டுக்கள் அவர்களுக்கு கிடைத்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் குறித்து நடிகர் ராஜேஷ் கூறிய மேலும் சில அரிய தகவல்களை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்