கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,November 13 2019]

’இதுதாண்டா போலீஸ்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் ராஜசேகர். இவர் இன்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் பெத்த கோல்கொண்டா என்ற பகுதியில் சென்றபோது திடீரென விபத்துக்குள்ளானது

இந்த நிலையில் விபத்தில் சிக்கிய நடிகர் ராஜசேகரை அந்த பகுதியில் இருந்தவர்கள் காரில் இருந்து வெளியேற்றி காப்பாற்றினார். அவரது காரில் பாதுகாப்பு பலூனில் இருந்ததால் அவர் காயமின்றி உயிர் தப்பினார்

இந்த நிலையில் காரில் இருந்து மீட்கப்பட்டவுடன் விபத்து குறித்து தனது மனைவி மற்றும் காவல்துறையினருக்கு டாக்டர் ராஜசேகர் தகவல் அளித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து விபத்து குறித்து டாக்டர் ராஜசேகரிடம் விசாரணை நடத்தினர். அதன்பின் அவர் தன மனைவி ஜீவிதாவின் காரில் வீட்டிற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ராஜசேகர் முழு ஓய்வில் இருப்பதாகவும் ஒரு சில நாட்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது
 

More News

தற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்

தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுவன் ஒருவனை அவனுடைய நண்பன் சாதுரியமாக

துணை முதல்வருக்கு மனைவியாகும் தனுஷ் பட நாயகி!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் 'ஆக்சன்'. இந்த படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது.

ரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி!

அமிதாப்பச்சன் நடத்தி வரும் குரோர்பதி நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜித்குமார்

அஜித் படம் செய்த அபார சாதனை: டுவிட்டரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

டுவிட்டர் என்ற சமூக வலைத்தளம் கிட்டத்தட்ட அஜித் ரசிகர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது என்றே சொல்லலாம். அஜித் படத்தின் அறிவிப்பு வெளிவரும்போதும்,

10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்! வைரலாகும் வீடியோ

பெரியவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே சில சமயம் டென்ஷன் ஆகிற நிலையில் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு