மனைவி குழந்தைகளுடன் நடிகர் ரகுமான்.. ரம்ஜான் கொண்டாடிய க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,April 24 2023]

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான ரகுமான் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ரம்ஜான் கொண்டாடும் புகைப்படங்கள் அவரது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ’நிலவே மலரே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரகுமான். அதன் பிறகு அவர் ’வசந்த ராகம்’ ’ஒருவர் வாழும் ஆலயம்’ ‘ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நிலையில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’புதுப்புது அர்த்தங்கள்’ மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ’சங்கமம்’ ஆகிய திரைப்படங்கள் ரகுமான் திரையுலக வாழ்வில் திருப்பத்தை கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் மனைவியின் சகோதரி ஆன மெஹருன்னிசா என்பவரை ரகுமான் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ரகுமான் தனது மனைவி குழந்தைகளுடன் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படம் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் மதுராந்தகன் என்ற கேரக்டரில் ரகுமான் நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'நாட்டாமை' டீச்சர் நடிகை ராணியா இவர்? லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

சரத்குமார் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'நாட்டாமை' திரைப்படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சிவகார்த்திகேயனின் 'அயலான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பண்டிகை நாளில்  செம்ம   விருந்து..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அயலான்'. இந்த படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு

சாதி பெயரை சொல்லி திட்டினார், காதலிப்பதாக கூறி ஏமாற்றினார்.. விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கூறி மக்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் அவர் தன்னுடைய சாதி பெயரை சொல்லி திட்டினார்

குழந்தை விவகாரம்.. நீதிமன்ற தீர்ப்பை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிக்பாஸ் ரக்ஷிதா ..!

 பிக்பாஸ் ரக்ஷிதா தனது சமூக வலைதளத்தில் குழந்தை குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

'லால் சலாம்' குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி.. ஜாலியான புகைப்படங்கள்..!

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக