கொரோனா குறித்த பொய்யான செய்திகளை நம்பாதீர்கள்: பிரபல நடிகரின் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸை எதிர்கொள்ள, வைரஸின் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனாவின் தீவிரம் குறித்தும் ஆபத்து குறித்தும் பொதுமக்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் நடிகர்களில் ஒருவராகிய ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா குறித்த பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அன்பான நண்பர்களே! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் நாம் ஒவ்வொருவரும் மிக கவனமாக இருக்கவேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்
தனிப்பட்ட சுகாதாரம் மிகவும் முக்கியம். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவத் துறையும் அரசும் கூறிவரும் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். இதையெல்லாம்விட மிக முக்கியமானது, தயவுசெய்து பொய்யான தகவல்களையும் பொய்யான செய்திகளை நம்பாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள், பயமில்லாமல் இருங்கள், கொரோனாவை எதிர்ப்போம் நம்மால் முடியும் என்று கூறியுள்ளார்.
We can do it. #breakthechain #tamil #COVID2019india pic.twitter.com/V4mqhzJHYM
— Rahman (@actorrahman) March 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments