21 வயது இளைஞரின் இயக்கத்தில் முதன்முதலாக ரகுமான்
- IndiaGlitz, [Tuesday,September 22 2015]
கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் ரகுமான். புதுப்புது அர்த்தங்கள், சங்கமம் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் சமீபத்தில் நடிகை ஜோதிகா எட்டு வருடங்களுக்கு பின் ரீ-எண்ட்ரி ஆன '36 வயதினிலே' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் அறிமுக இயக்குனர் என்பது மட்டுமின்றி அவருக்கு வயது வெறும் 21 என்பது குறிப்பிடத்தக்கது. ரகுமானின் திரையுலக வாழ்வில் இவ்வளவு குறைந்த வயது இளைஞர் ஒருவரின் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல்முறை
திறமை மிக்க இன்றைய இளைஞர் ஒருவர் என்னை முக்கிய கேரக்டரில் நடிக்க தேர்வு செய்தது கடவுள் எனக்கு கொடுத்த வரமாகவே நினைக்கின்றேன்' என ரகுமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தின் பெயர் 'துருவங்கள் பதினாறு'. க்ரை த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.