நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ’நிலவே மலரே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரகுமான். அதன் பின்னர் இவர் பாலச்சந்தரின் ’புதுப்புது அர்த்தங்கள்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார் என்பதும் அதன் பின்னர் ஹீரோவாகவும், வில்லனாகவும் குணசித்திர கேரக்டர்களிலும் பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு ரகுமான் நடித்த ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவரும் ’துப்பறிவாளன் 2’, ‘பொன்னியின் செல்வன்’ உள்பட 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய ரகுமான், தனது குடும்ப புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்திருந்தார். மனைவி மெஹ்ருன்னிசா மற்றும் மகள்கள் ருஷ்தா ரஹ்மான் மற்றும் ஆலிஷா ரஹ்மான் ஆகியோர்கள் அந்த புகைப்படத்தில் உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரஹ்மானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். நடிகர் ரகுமானின் மனைவி மெஹ்ருன்னிசா, ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தில் பிரபாஸ்? இயக்குனர் அளித்த பதில்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கும் 'மிஷன் இம்பாஸிபிள்' என்ற திரைப்படத்தின் 6 பாகங்கள் உலக அளவில் மிகப்பெரிய ஹிட்டாகிய நிலையில் தற்போது இந்த படத்தின் 7ஆம் பாகம் தயாராகி வருகிறது

கருப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட மூன்று பூஞ்சை தொற்றுக்கள் பாதித்த நபர்...! அதிர்ந்துபோன மருத்துவர்கள்...!

மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றனர்

இந்த இயக்குனரின் மகன் இறந்ததும் PSBB பள்ளியில் தான்: திடுக்கிடும் தகவல்!

கடந்த இரண்டு நாட்களாக பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தனுஷூடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்: காயத்ரி ரகுராம்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படம் வெளிவந்து இன்றோடு பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்து தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்

ஒரு வயதில் விஜய் டிவி ரக்‌ஷன்: பக்கத்தில் இருக்கும் குட்டிப்பாப்பா யாரு தெரியுமா? 

விஜய் டிவியில் தொகுப்பாளர்களில் ஒருவரான ரக்‌ஷனை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கிய விதம் அனைவரும் பாராட்டத்தக்க